4.5 C
Scarborough

காதல் கண்சிமிட்டும் நாள்…இன்றைய ராசிபலன் – 16.02.2026

Must read

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு உடலில் அசதி ஏற்படும். இரவில் நீண்ட நேரம் விழிக்காமல் இருப்பது நல்லது. வியாபாரத்திற்காக கேட்ட கடன் தொகை வங்கியிலிருந்து பெறப்படும். உதவிய நண்பர்கள் நன்றிக் கடன் செய்வீர்கள். காதல் கண்சிமிட்டும். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறுவர். உடல் நலத்தில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

ரிஷபம்

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புது நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். திடீர் பணவரவால் மனம் மகிழும். காதல் கசக்கும். எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செழிப்புறும். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு உண்டு. வெளிநாட்டுத் தொடர்பால் நன்மை கூடும். தேகம் பளிச்சிடும்,

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும் வார்த்தைகள் கூட பிரச்சினையைத் தந்து நிரந்தரமாக பேசாமல் போக வாய்ய்புள்ளதால் கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கடகம்

உத்யோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத் தலைவிகளுக்கு பணப்பற்றாக்குறை தீரும். திருமண முயற்சி பலிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். மார்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் தங்கள் அமைதியான அணுகுமுறையால் அதிக ஆர்டர்களை பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை காப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

சிம்மம்

உத்யோகஸ்தர்கள் வேலையில் ஆர்வம் மிகும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடன் தொல்லை நீங்கும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். திருமண முயற்சி பலிக்கும். நீண்ட நாட்களாக தங்கள் பெற்றோர்கள் உடல் நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடல் நலம் சீராகும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கன்னி

உத்யோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை விரைவில் முடிப்பர். பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். வியாபாரிகள் விற்பனையைக் கூட்ட விளம்பரம் செய்வார்கள். சிலருக்கு காதல் மலரும். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

துலாம்

உத்யோகஸ்தர்கள் தேங்கிக் கிடந்த வேலைகளை முடித்துவிடுவீர்கள். தம்பதிகள் ஒன்று சேர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்வர். பெற்றோர்களின் சம்மத்த்தினால் இளைஞர்களுக்கு திருமண யோகம் ஏற்படுவதால் முயற்சியுங்கள். காதலர்கள் ஒன்று சேருவர். குல தெய்வ கோவில் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

வீட்டில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சலுகை கிடைக்கும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள். குடும்பத் தலைவர்கள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த முக்கியமான வேலைகள் இன்று முடித்துக் காட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

தனுசு

வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். காதலர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் கைக்கு வந்துசேரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். அரசாங்க வேலை அனுகூலகும். வீட்டில் பெரியவர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம்..

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மகரம்

வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். கலைஞர்களுக்கு பெரிய பேனர்களில் இருந்து அழைப்பு வரும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷட நிறம்: ஆரஞ்ச்

கும்பம்

வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். நண்பர்கள் விட்டுக் கொடுப்பார்கள். குடும்பப் பிரச்சினை தீரும். அவர்களாகவே தங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்பர். தேகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மீனம்

வெளியிடங்களுக்குச் சென்றுவருவீர்கள். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு ஒரு கணிசமான வருவாய் வந்து சேரும். தொழிலில் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். வெளிவட்டார நண்பர்களிடம் கவனம் தேவை. மனைவிக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்து மதிப்பளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article