2.8 C
Scarborough

கமல் பேச்சால் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது – வைரமுத்து!

Must read

“நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். 1967-ல் எனது கருத்து உருவாக்கத்தில் வழிகாட்டியாக அவர் அமைந்தார். அவர் வழிகாட்டிய மையம் என்ற கொள்கையை தான் நான் கையில் வைத்திருக்கிறேன்.

நான் கடவுளை நோக்கி கை கூப்ப போவதில்லை. எனது பகுத்தறிவு மூளை, கடவுள் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அப்புறப்படுத்திவிட்டது. நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள். தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா. ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தி அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே. தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டேன்.” என டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர், கமல்ஹாசன் எம்.பி. பேசியிருந்தார்.

கமல்ஹாசன் எம்.பி அவர்களின் நாடாளுமன்ற உரையை பாராட்டி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளப்பதிவில் பதிவிட்டுள்ளார்.அதில் “அன்புள்ள கமல் எம்.பி அவர்களே! கன்னிப் பேச்சல்ல;காளைப் பேச்சு. ஒரு தேசியவாதியின் மொழி ஆனால், தமிழச் சாதியின் குரல். நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது தாடிச் சிங்கத்தின் தமிழ் கேட்டும்; ஆங்கிலம் கேட்டும். என்னையறியாமல் மீசை முறுக்கின என் கட்டை விரலும் சுட்டு விரலும். காடு அதிரட்டும் களிறே பிளிறு” என குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article