கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் “சேயோன்”. துடிப்புமிக்க அதிரடியான புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் தோன்றும் இந்தப் படம் ஒரு கிராமியப் பின்னணியில் மிகச்சிறந்த பொழுதுபோக்குச் சித்திரமாக மலரவிருக்கிறது.

