5.8 C
Scarborough

எதிர்கால திட்டங்கள் தெளிவாகும்… இன்றைய ராசிபலன் – 09.02.2026

Must read

மேஷம்

இன்றைய நாள் உங்களுக்கு நிறைவான மனநிலையை தரும். எண்ணங்களில் தெளிவு காணப்படும். தொழிலில் மெதுவான முன்னேற்றம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நம்பிக்கை கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் உதவுவார்கள். லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

ரிஷபம்

காலையிலேயே முக்கிய முடிவு எடுக்க வேண்டிய சூழல் வரும். அவசரப்படாமல் சிந்தித்துச் செயல்படுங்கள். வியாபாரம் லாபத்தை கொடுக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். சேமிப்பில் கவனம் செலுத்த நல்ல நாள். சகோதரர்களுடன் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மிதுனம்

வீட்டில் சுப காரிய பேச்சு எழும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலம் மேம்படும். மாணவர்களுக்கு கவனம் கூடும். படிப்பில் அவர்களுக்கு முன்னேற்றம். நீண்ட நாள் பிரச்சனை ஒன்று தீரும். சட்ட விஷயங்களில் சாதகமான போக்கு தென்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்

கடகம்

ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். இன்று பேசும் வார்த்தைகள் பலன் தரும். கோவில் வழிபாடு மன அமைதி தரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வில் நம்பிக்கை வரும். அரசு காரியங்களில் தாமதம் குறையும். உடலின் நீர் சத்து குறையும். தண்ணீர் அதிகம் குடிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

சிம்மம்

புதிய அறிமுகம் உண்டாகும். அந்த அறிமுகம் எதிர்காலத்தில் பயன் தரும். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வீட்டில் சந்தோஷமான சூழல் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கலாம். நல்ல செய்தி ஒன்று வரும். எதிர்பாராத உதவி கிடைக்கும். தர்ம காரியங்களில் மனம் ஈடுபடும். இனிப்பு உணவுகளை குறைத்துக் கொள்ளவும்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

கன்னி

அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் நிம்மதி உண்டு. பெண்கள் வீட்டினை தாங்கள் அழகு படுத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளுக்கு மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு அக்கம் பக்கத்தாரின் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

பெண்கள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். தங்கள் பிள்ளை அயல்நாடு செல்வார். பணவரவு நன்றாக இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. தம்பதிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு நிறம்

விருச்சிகம்

கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருப்பர். குடும்பத் தலைவிகள் வீட்டிற்கு தேவையான அத்தியாசிய பொருள்களை வாங்குவர். அரசு டென்டர் போன்றவைகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவர். வியாபாரம் செழிப்புறும்.

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

தனுசு

எதிர்கால திட்டங்கள் தெளிவாகும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். ஆனால் சுமையாக உணரமாட்டீர்கள். பிறரின் ஆலோசனையை கேட்கவும். ஆனால் முடிவு உங்களுடையதே. சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. அதனால் மனமகிழ்ச்சி கிடைக்கும். தம்பதிகள் அன்னோன்யம் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மகரம்

இன்று நல்ல நாள். மெதுவாக ஆனால் உறுதியான முன்னேற்றம் உண்டாகும். உங்கள் கனவுகள் நிறைவேறும். மன அமைதி கிடைக்கும். குடும்ப பெரியவர்களின் ஆசீர்வாதம் உண்டு. மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். சக ஊழியர்களுடன் கருத்து பரிமாற்றம் அதிகரிக்கும். புதிய நட்பு உருவாகும். அந்த நட்பு பயனளிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீல நிறம்

கும்பம்

தெய்வ அருள் கிடைக்கும். உங்கள் நிலைப்பாடு உறுதியாகும். நிதானமே உங்கள் பலம். அரசு காரியங்களில் முன்னேற்றம் உண்டு. நண்பர்களிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தீரும். வியாபாரிகளுக்கு நல்லதொரு லாபம் உறுதியாக கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நன்மைகள் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

மீனம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மூல நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article