5.2 C
Scarborough

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?…12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன் – 06.02.2026

Must read

மேஷம்

வியாபாரிகளுக்கு போட்டிகள் விலகும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும். நல்ல வரன் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பதவி உயர்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சியைத் தரும். தம்பதிகள் ஒற்றுமை காப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

ரிஷபம்

மருத்துவர்களின் புகழ் ஓங்கும். வழக்குகள் சாதகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீடு கட்ட கடன் கிடைக்கும். வீட்டில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து சொத்து, பணம் வரும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வான்நீலம்

மிதுனம்

வியாபாரிகளின் விற்பனை கூடி லாபம் கூடும். எதிர்வீட்டுக்காரருடன் சண்டை வேண்டாம். வெளிநாட்டு நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மாற்றலாகி போய்விடுவர். வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கடகம்

பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் மிகும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். பட விநியோகஸ்தர்கள் கிடைப்பர். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். விரைவில் தங்கள் படம் வெளியாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் அலுவலகத்தின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

சிம்மம்

பிள்ளைகளது ஆசிரியர் புத்திசாலித்தனத்தை மெச்சுவார்கள். காதலர்கள் தங்கள் கடமையை உணர்வர். தாங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும். வீடு வாங்க கடன் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தங்கள் பெண்ணுக்கு நல்ல வரண் அமையும். உங்கள் உடல் உஷ்ணம் அதிகமாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கழுத்து வலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை விற்கும் எண்ணம் தோன்றும். எதிர்வீட்டுக்காரர்களுடன் இருந்த பகைமை நீங்கும். கோவில் விழாக்களில் மரியாதை கிடைக்கும். வெளியூர் செய்தி மகிழ்ச்சியைத் தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

உத்யோகத்தில் அதிக கவனம், நிதானம் தேவை. அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு உண்டாகலாம். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பொதுபணிகளில் உள்ளவர்கள் ஆதாரமில்லாமல் மேடைகளில் ஆவேசமாக பேச வேண்டாம்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ்

விருச்சிகம்

புதிய திட்டங்களை மனதிற்குள் அசைபோடுவீர்கள். தம்பதிகளிடையே மனஸ்தாபம் விலகும். உத்யோகம் சாதகமாக செல்லும். இன்று குடும்பத்துடன் ஷாப்பிங் மாலுக்கு சென்று வருதல், திரைப்படம் பார்த்தல் போன்றவைகளில் நேரத்தை செலவழிப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

தனுசு

தேவையான பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். விடுமுறை நாட்களில் புதிய கலைகளை கற்று கொள்வீர்கள். தோல்வி பயம் நீங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதியர்களிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வருமானம் உயரும். வசதி, வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷட நிறம்: சாம்பல்

மகரம்

உத்யோகஸ்தர்கள் வேலையை விரைவில் முடிப்பர். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். கணவன்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும். பொறுமை மிக அவசியம். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. உங்களை சார்ந்து இருப்பவர்களின் நிலையினை உணர்ந்து உதவுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மீனம்

பிரபலங்களின் எதிர்பாராத சந்திப்பு நிகழும். அவர்களால் நன்மைகள் உண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். பயணங்கள் அதிகரிக்கும். திடீர் வெளியூர் பயணம் உண்டு. உறவினர்களை பார்த்து மகிழ்வீரகள். வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். இணையதளத்தை அதிகம் பயன்படுத்துவர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article