புது தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பங்குபற்றினார்.
புது தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்ற 11 வது நிதி ஆயோக் கூட்டத்திற்கு இந்தியப் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜநாத் சிங், ஜெ. பி. நட்டா, நிதின் கட்கரி , சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் ,
தமிழக முதலமைச்சர் விஜய், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, கர்நாடகா மாநில முதல்வர் டி கே சிவக்குமார் உள்ளிட்ட பல மாலங்களின் முதல்வர்களும், நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய மற்றும் முன்னணி உயர் அதிகாரிகளும் பங்கு பற்றினர்.
முன்னதாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் புது தில்லியில் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
