அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ விமானம் தாங்கிக் கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது. பலமுறை எச்சரித்தும் அந்த ட்ரோன் கப்பலை நோக்கி வேகமாக வந்ததால், தற்காப்பு நடவடிக்கையாக இந்த அதிரடி எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

