17.8 C
Scarborough

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு!

Must read

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது.

ஈரானின் அரசுக்குச் சொந்தமான ‘பிரஸ் டிவி’ ஊடகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் ‘காதம் அல்-அன்பியா’ மத்திய தலைமையகம் இந்த உத்தியோகபூர்வ உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, எண்ணெய் கப்பல்கள் மற்றும் வர்த்தகக் கப்பல்கள் உட்பட எந்தவொரு சர்வதேச கப்பலும் இனி இந்த நீரிணையைக் கடக்க அனுமதி இல்லை.

ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். தெற்கு ஈரானிய மாகாணத்தின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் உட்பட, அதன் ‘தொடர்ச்சியான பகைமை நடவடிக்கைகளுக்கு’ பதிலடியாகவே இந்த மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article