உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய- உக்ரைன் போருக்கு விரைவான மற்றும் அமைதியான தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
அமைதியை உறுதி செய்வதற்கு இந்தியா சாத்தியமான அனைத்து பங்களிப்பையும் வழங்க உறுதிபூண்டுள்ளதாகவும் அவர் உக்ரைன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி தனது X கணக்கில் இந்தியப் பிரதமருடனான தொலைபேசி உரையாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் ஒட்டுமொத்த இராஜதந்திர நிலைமை உட்பட அனைத்து முக்கிய விடயங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.