16.8 C
Scarborough

வேகமாக பரவும் தீ ; உதவி கோரும் வனத்துறை!

Must read

சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பட்ட தீ ,வேகமாக பரவி வருவதாகவும், தீயைக் கட்டுப்படுத்த விமானப்படையின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நல்லதண்ணிய, வால மலை தோட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் ஏற்பட்ட தீ, அப்பகுதியில் நிலவும் மிக வறண்ட காலநிலையுடன் மலை உச்சிகளில் வேகமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வனப்பகுதிக்கு விசமிகளினால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என நல்லதண்ணிய பொலிஸார் சந்தேகிக்கின்றதுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வனப்பகுதிகளுக்கு தீ வைக்கும் நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு வனத்துறையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article