6.6 C
Scarborough

வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த 2 தாதாக்கள் கைது – விரைவில் நாடு கடத்தல்

Must read

வாஷிங்டன் – இந்தியாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தாதாக்கள் நாட்டிற்கு வெளியே இருந்தபடி, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை வேலைக்கு அமர்த்தி, தங்கள் மாபியா கும்பல்களை இயக்கி வருகின்றனர். இந்த கும்பல்களின் தலைவர்களை மடக்கிப் பிடிப்பதற்காக இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சர்வதேச அளவில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தியாவை சேர்ந்த வெங்கடேஷ் கார்க் மற்றும் பானு ராணா ஆகிய 2 தாதாக்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வெங்கடேஷ் கார்க் அரியானா மாநிலம் நாராயண்கர் பகுதியை சேர்ந்தவர். இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் அரியானா, ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை வைத்து மாபியா கும்பலை நடத்தி வந்துள்ளார். dailythanthi

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article