3 C
Scarborough

வெனிசுலா வின் எல்லைகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்படக்கூடும் – கனடா எச்சரிக்கை.

Must read

பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்து வருவதைக் சுட்டிக்காட்டி, Venezuela விக்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடிய மத்திய அரசு தனது நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

​”Venezuela வின் தற்போதைய நிலைமை பதற்றமாக உள்ளது, இது விரைவாக தீவிரமடையக்கூடும்” என்று Ottawa தனது புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளது. மேலும், “எல்லைகள் மற்றும் வான்வெளிப் பகுதிகள் குறுகிய கால அவகாசத்தில் மூடப்படலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளது.

​தலைநகர் Caracas இல் உள்ள பல இடங்களைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டு அதிபர் Nicolás Maduro மற்றும் அவரது மனைவியைக் கைது செய்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Venezuela விற்கான கனேடிய தூதரகம் 2019 முதல் திறக்கப்படவில்லை, என்று அந்த ஆலோசனை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், Venezuela வில் உள்ள கனேடியர்களுக்குத் தூதரக உதவிகளை வழங்கும் எங்களது திறன் மிகவும் வரம்பிற்குட்பட்டது, என்றும் அவை தொலைதூரத்தில் இருந்தே வழங்கப்படுகின்றன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​Venezuela விற்கு பயணம் செய்யத் தீர்மானிக்கும் கனேடியர்கள், தங்கியிருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருக்கவும் போதுமான உணவு மற்றும் தண்ணீர் இருப்பை வைத்திருக்கவும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களை உன்னிப்பாகக் கவனிப்பதற்கும், வெளிநாட்டிலுள்ள கனடியர்களுக்கான பதிவு (Registration of Canadians Abroad) சேவையில் தங்களைப் பதிவு செய்து கொள்ளவும் மத்திய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

அவசரகாலத் தூதரக உதவி தேவைப்படும் கனேடியர்கள், கனடாவிலிருந்து 1-800-387-3124 என்ற எண்ணிற்கும், கனடாவிற்கு வெளியிலிருந்து 1-613-996-8885 என்ற எண்ணிற்கும் அழைப்பதன் மூலமாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ Global Affairs Canada வின் அவசரகால கண்காணிப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article