கனடாவின் முன்சி டெலாவேர் நேஷன் பகுதியில் இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 5.30 மணியளவில், ஜூபிலி சாலையில், தோமிகோ சாலை அருகே பெண் ஒருவர் வாகனத்தின் அருகில் சலனமற்றிருப்பதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸாருக்கு (OPP) தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குறித்த பெண்ணுக்கு உயிர் காப்பு முதலுதவிகள் வழங்கிய போதிலும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இரு சந்தேகநபர்களும் திருடப்பட்ட வாகனத்துடன் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் அவர்களை பின்னர் கைது செய்துள்ளனர்.