விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘தலைவன் தலைவி’. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர். இப்படம் ஜூலை 25-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் அடிநாதம் என்பதை ட்ரெய்லர் கோடிட்டு காட்டுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, எமோஷனல், காமெடி என ஒரு முழுமையாக ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் களத்துக்கான வாய்ப்பை கொண்ட படம் என்பதை ட்ரெய்லரின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் ட்ரெய்லரின் கவனம் ஈர்க்கும் பிற அம்சங்கள். குடும்ப சென்டிமெண்ட் படங்கள் இயக்குநர் பாண்டிராஜின் வலுவான களம் என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ’தலைவன் தலைவி’ ட்ரெய்லர் வீடியோ: