13.8 C
Scarborough

பிரபாஸ் உடன் இணையும் விஜய் சேதுபதி?

Must read

‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிப்பதற்கு விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபாஸ் உடன் நடிக்கவிருப்பவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சஞ்சய் சத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இவர்கள் ஒப்பந்தம் செய்யப்படுவார்களா என்பது தெரியவரும்.

பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்குப் பிறகு மீண்டும் பிரபாஸ் – சஞ்சய் தத் இணையும் படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கும் என கூறப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்தால், பிரபாஸ் உடன் அவர் நடிக்கும் முதல் படமாக ‘ஸ்பிரிட்’ இருக்கும். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கவுள்ளது.

டி-சிரீஸ் மற்றும் ஸ்ரீபத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரிக்கவுள்ளது. ‘அனிமல்’ படத்துக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ள இப்படத்தை பல மொழிகளில் வெளியிட படக்குழு இப்போதே முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article