17.3 C
Scarborough

வாடகை அதிகரிப்பு – வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது ஒட்டாவா!

Must read

கனடாவின் பிரதான நகரங்களான Calgary, Toronto, Vancouver மற்றும் Halifax ஆகியநகரங்களின் வாடகை செலவு விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் 2 முதல் 8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன, இந்த நகரங்களுடன் ஒப்பிடும் போது தலைநகர் வின் வாடகை விகிதம் குறைவான அதிகரிப்பையே கொண்டுள்ளதாக Canadian Mortgage and Housing Commission (CMHC) தெரிவித்துள்ளது.

2023 மற்றும் 2024 க்கு இடையில், இரண்டு படுக்கையறைகள் கொண்ட வாடகை அறைகள் மற்றும் நகரத்தின் சராசரி வாடகை செலவுகள் 3.9 சதவீதம் அதிகரித்தன, ஆனால் கடந்த ஆண்டு, 2025 உடன் ஒப்பிடும்போது, ​​வாடகை அதிகரிப்பு சற்று குறைந்து 2.1 சதவீதமாக இருந்தது. ஆனால் Toronto 2023/24 இல் மெதுவான வாடகை விலை குறைவையே பதிவு செய்தது. இருப்பினும் இந்த ஆண்டு 3.7 சதவீதம் சரிவைக் கண்டதாக தரவு காட்டுகிறது.

இதேபோல், இந்த ஆண்டு ஒட்டாவாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட condo அடுக்குமாடி குடியிருப்புக்களின் வாடகைகளுக்கான விலைகளும் குறைவான (2.9 சதவீதம்) அதிகரிப்பையே காட்டுவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

பழைய கட்டிடங்களின் வாடகை விலைகள் Vancouver போன்ற விலையுயர்ந்த சந்தைகளில் புதிய சொத்துக்களுடன் இணையாக உள்ளன. இது மக்களை வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளில் நீண்ட காலம் தங்கியிருக்க கட்டாயப்படுத்தியது. இதனால் அவர்கள் வெளியேறும்போது கணிசமான வாடகை அதிகரிப்பு ஏற்பட்டது. மெதுவான மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகள் காரணமாக, வெற்றுக் குடியிருப்புக்களின் விகிதங்கள் ஆண்டு முழுவதும் தொடர்ந்து உயரும் என்று அறிக்கை கணித்துள்ளது.

கனேடியர்கள் மீது அதிக வாடகைச் சுமை இருப்பதால், சில பாரம்பரிய வீடுகளை நிரப்புவது கடினமாகவே இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article