22.5 C
Scarborough

வாக்காளர்களுக்கு எச்சரிக்கை!

Must read

கனடாவில் தேர்தல் சூழல் சூடாகி வரும் நிலையில், வாக்காளர்களை ஏமாற்றக்கூடிய குறுஞ்செய்திகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

“Mary” அல்லது “Nancy” என்ற பெயரில் வாக்காளர்களிடம் வாக்குப் பயன்களைப் பற்றி கேட்கும் குறுஞ்செய்தி வருவது மிகவும் இயல்பானதாக சிலர் கருதலாம். ஆனால் இது, உண்மையில் கவலைக்கிடமான ஸ்கேம் நடவடிக்கையாக மாறி வருகிறது.

கேல்கரியை சேர்ந்த ஸ்டேசி ஸ்கோனெக் என்பவர், அவரது மொபைலில் “ERG National Research” என்ற பெயரில் வந்த வாக்குச்சோதனை குறுஞ்செய்திக்கு பதில் அளித்தபோது தான் சந்தேகம் எழுந்தது. முதலில் வாக்குப் போக்கைக் கேட்டார், பின்னர் பின்கோடு கேட்டார் — ஆனால் பெயரை கேட்கும் போது தான் ஸ்டேசி எச்சரிக்கையுடன் நடந்துகொண்டார். “உண்மையில் என் பெயர் தேவையில்லை என்பதே எனக்கு சந்தேகத்தை உருவாக்கியது,” என்று ஸ்டேசி கூறினார்.

இதே போன்ற முறைப்பாடுகள் கனடா முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குறுஞ்செய்திகள்தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வெண்டுமென Canadian Research Insights Council (CRIC) அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பலர் இந்த குறுஞ்செய்திகளில் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துவிட்டதற்குப் பிறகு அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

“முக்கியமாக, மூத்த குடிமக்கள் இது போல பதில் அளித்துவிட்டு பின்னர் தங்களின் பாதுகாப்பு தொடர்பாக கவலைப்படுகிறார்கள்,” சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article