22.5 C
Scarborough

வாக்களிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள்!

Must read

இன்றையதினம் நடைபெறும் 45வது பொதுத் தேர்தலில் அடுத்த அரசாங்கத்தை யார் அமைக்க வேண்டும் என்பதற்கான ஆணையை கனேடிய மக்கள் வழங்கவுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நாளில் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் Elections Canada தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தவகையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு நீங்கள் தேர்தல் நாளில் குறைந்தது 18 வயது நிரம்பிய கனேடிய குடிமகனாக இருக்க வேண்டும். தேர்தல் நாளில் வாக்குச் சாவடிகள் 12 மணி நேரம் திறந்திருக்கும் உங்களுக்கென ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் சென்று நீங்கள் வாக்களிக்க வேண்டும். பிரதேசங்களைப் பொறுத்து நேர விபரம் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளுமாறும் Elections Canada கேட்டுக்கொண்டுள்ளது.

வாக்காளர் அடையாளத்தை உறுதிப்படுத்தல்.

வாக்காளர்கள் பின்வரும் ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தையும், முகவரியையும் உறுதிப்படுத்த முடியும்.

சாரதி அனுமதிப்பத்திரம் (driver’s licence) அல்லது உங்கள் பெயர், புகைப்படம் மற்றும் தற்போதைய முகவரியுடன் கனேடிய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேறு ஏதேனும் அடையாள ஆவணம். (federal, provincial/territorial or local)

மேற்கூறியவை உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் இரண்டு அடையாளச் சான்றுகளைக் காட்ட வேண்டும், அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது உங்கள் தற்போதைய முகவரி இருக்க வேண்டும்.

அதுவும் உங்களிடம் இல்லையென்றால், உங்கள் அடையாளத்தையும் முகவரியையும் எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும், அத்துடன் உங்களை உறுதிப்படுத்தக்கடிய ஒருவர் உங்களுடன் இருக்க வேண்டும். அவர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் தனது அடையாளத்தையும் முகவரியையும் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நபரும் ஒரு நபரை மட்டுமே சான்றுப்படுத்த முடியும்.

வாக்காளர் தகவல் அட்டை
(Voter information card)

உங்கள் வாக்குச் சாவடியைக் கண்டுபிடிக்க, உங்கள் தற்போதைய முகவரியைப் பதிவு செய்த பின்னர் உங்கள் வீட்டிற்கு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட வாக்காளர் தகவல் அட்டையைச் சரிபார்க்கவும்.

இந்த அட்டை எங்கு, எப்போது வாக்களிக்க வேண்டும், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியை அடைதல், எவ்வாறு முன்கூட்டியே உதவி கோருவது மற்றும் சிறப்பு வாக்குச்சீட்டு மூலம் வாக்களிப்பு நடைபெறும் அருகிலுள்ள Elections Canada அலுவலகத்தின் முகவரி ஆகியவற்றைக் கூறுகிறது.

வாக்களிப்பு நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டையுடன் இந்த Voter information card இனையும் கொண்டு வருதல் வாக்களிப்பை இலகு படுத்தும்.

வாக்காளர் தகவல் சேவை

வாக்காளர் தகவல் சேவை உங்கள் தேர்தல் மாவட்டம் பற்றிய தகவல்களை வழங்குகிறது, இதில் வரைபடம், வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் கடந்த தேர்தல்களின் முடிவுகள் ஆகியவை அடங்கும்.

உங்கள் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல், தேர்தல் நாளில் உங்கள் வாக்குச் சாவடிகளின் இருப்பிடம் மற்றும் உங்கள் உள்ளூர் Elections Canada அலுவலகத்தின் முகவரி ஆகியவற்றைக் கண்டறியவும் இதைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் வாக்களிக்கப் பதிவு செய்யவில்லை என்றால், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் பதிவு செய்யலாம்.

தேர்தல் நாளில் வாக்களிக்க சிறந்த நேரம்

தேர்தல் நாளில் வாக்களிக்க சிறந்த நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என்று Elections Canada தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் வாக்களிப்பது பற்றிய மேலதிக தகவல்களை Elections Canada இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article