தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு கூட்டம் வவுனியாவில் இன்று (09) இடம்பெற்று வருகின்றது.
ரெலோ தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் வவுனியா இரண்டாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த கூட்டம் நடைபெற்று வருகின்றது.
சமகால அரசியல் நிலவரங்கள், மற்றும் முக்கிய விடயங்கள் தொடர்பாக இக் கலந்துரையாடலில் பேசப்பட இருப்பதாக அறிய முடிகின்றது.
இக்கலந்துரையாடலில் கட்சியின் முக்கியஸ்தர்களான, ஹென்றிமகேந்திரன், செந்தில்நாதன் மயூரன், சுரேன்குருசாமி, பிரசன்னா இந்திரகுமார், புரூஸ், உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

