6.3 C
Scarborough

வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​ உடல்​நிலை மோசம்

Must read

வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் உடல்நிலை மோசமடைந்​துள்​ள​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்துள்ளனர்.

80 வயதாகும் முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வுக்கு சுவாசப் பிரச்சினை அதி​கரித்​ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கடந்த வாரம் அனு​ம​திக்​கப்​பட்​டார். உடலில் ஆக்​ஸிஜன் அளவு குறைந்​தது, கார்​பன் டை ஆக்​ஸைடு அளவு உயர்ந்​தது. இதையடுத்து நுரை​யீரல் மற்​றும் முக்​கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்​கும் நோக்​கில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரு​கிறது

சிறுநீரகம் முற்​றி​லும் செயலிழந்​துள்​ள​தால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்​யப்​படு​கிறது. ரத்​த​மும் ஏற்ற வேண்​டி​யுள்​ளது. அவருக்கு இருதயக் குழா​யிலும் பிரச்சினை உள்​ளது. இந்நிலையில் நேற்று அவரது உடல்​நிலை மோசமடைந்​த​தாக அவரது குடும்ப மருத்​து​வர் ஜாகித் ஹொசைன் தெரி​வித்​தார்.

அவர் மேலும் கூறும்​போது, “அவர் உடல்​நிலை தொடர்ந்து மோச​மான நிலை​யிலேயே இருந்து வரு​கிறது. தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்​கப்​பட்டு வரு​கிறது. அவருக்​கான சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருகிறோம்” என்றார்.

hindutamil

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article