19.6 C
Scarborough

லண்டன் ரயில் நிலையத்தில் வங்காள மொழி பெயர்பலகைக்கு கண்டனம்

Must read

இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் ஊரின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் வங்காள மொழியில் எழுதப்பட்டு இருந்தமைக்கு கிரேட் யார்மவுத் பகுதிக்கான  அமைச்சர் ரூபர்ட் லோவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரூபர்ட் லோவ் அவருடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட செய்தியில்,

லண்டன் நகரத்தில் ரயில் நிலையத்தின் பெயர்ப்பலகைகள்   ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இங்கு வேறு மொழிகளைப்பயன்படுத்த வேண்டியதில்லை  என பதிவிட்டார்.  இதேவேளை இரு மொழிகளில் இடம் பெற்ற பெயர் பலகையின் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அவருடைய இந்த பதிவுக்கு  சிலர் ஆதரவும், சிலர் இரு மொழிகளில்  பெயர்ப்பலகை இருப்பதில் தவறேதும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில், ரூபர்ட்டின் பதிவுக்கு எலான் மஸ்க், தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article