ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் உள்ளமையால் அவற்றின் ஆயுதஉதவி பொருளாதார உதவியால் போரில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தொடர்ந்து தாக்குப்பிடித்துவருகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக செயற்படுகிறது.
இந்நிலையில் வடகொரியா சுமார் 10 ஆயிரம் இராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் உக்ரைன் எல்லை அருகேயுள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கடுமையான பனி மற்றும் உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய இராணுவ வீரர்கள் பலர் பலியாகியுள்ளமையால் ரஷ்யாவுக்கு உதவும் வகையில் வடகொரியா இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக தென்கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.