உக்ரைன் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக வாக்குறுதியளித்த ரஷ்ய ஜனாதிபதி அதை மீறியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி கூறுகையில் :
உக்ரைன் எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் புடின் உறுதியளித்தார். ஆனால் அந்த வாக்குறுதிக்குப் பிறகும் உக்ரைன் மீது 150 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதலில் உக்ரைன் எரிசக்தி மையங்களும் குறிவைக்கப்பட்டன. என்று கூறியுள்ளார்.
இதேவேளை உக்ரைன் ஜனாதிபதியின் கருத்துக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளதோடு உக்ரைன் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்திவிட்டதாகவும், உக்ரைன் ரஷ்யாவின் எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘உக்ரைன் எரிசக்தி மையங்களை நாங்கள் தாக்காமல் உள்ளோம். ஆனால் பதிலுக்கு அதே நிலைப்பாட்டை உக்ரைன் இதுவரை கடைப்பிடிக்கவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.