16.3 C
Scarborough

யோஷித ராஜபக்ஷவிற்கு விளக்கமறியல் !

Must read

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சன்ஜீவனி முன்னிலையில், பிரசன்னப்படுத்தப்பட்ட பின்னர் அவரை 27 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளமைக்கான போதுமான ஆதாரங்கள் உள்ளதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டமைக்கு அமையவே யோஷித்த ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதறகமைய, இன்று காலை பெலியத்தையில் கைது செய்யப்பட்ட அவர் இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் அவரிடம் பலமணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article