15.1 C
Scarborough

யாழ். மாவட்டச்செயலரின் சொகுசு வாகனம் விபத்து! மகனும், நண்பரும் காயம்

Must read

யாழ். மாவட்டச்செயலரின் சொகுசு வாகனம் விபத்து! மகனும், நண்பரும் காயம்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் தனிப்பட்ட சொகுசு வாகனம் நேற்று விபத்துக்குள்ளானதில், மாவட்டச் செயலரின் மகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த சந்தர்ப்பத்தில் அந்தச் சொகுசு வாகனத்தில் மாவட்டச் செயலரின் மகனும், அவரது நண்பரும் பயணித்த நிலையில் வாகனம் மாவட்டச் செயலரின் பதவிநிலைப் பெயர்கொண்ட பெயர்ப்பலகையுடனேயே பயணித்துள்ளது எனத் தெரியவருகின்றது.

நேற்று மாலை மாவட்டச் செயலரின் சொகுசு வாகனத்தில் மாவட்டச் செயலரின் மகனும், அவரது நண்பர்கள் ஐவரும் சென்றபோதே இந்த விபத்து நடந்துள்ளது. யாழ்ப்பாணம், கந்தர்மடம் சந்திக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீதியோர மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அருகில் உள்ள வீட்டுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

மாவட்டச் செயலரின் மகன் சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், சாரதி இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவரது நண்பர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். அவரது கால்கள் வாகனத்துக்குள் சிக்குண்டநிலையில், சுமார் ஒருமணி நேரப் போராட்டத்தின் பின்னர் அவர் வெளியே எடுக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article