யாழ். வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் நேற்றைய தினம் இரவு வீட்டில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
தரம் 9 இல் கல்வி கற்று வரும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கரவெட்டி மத்தணி பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் யக்சன் வயது 14 என்ற மாணவன் ஆவார்.
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதுடன்மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.