Windsor பகுதி மற்றும் Greater Toronto பகுதியின் (GTA) சில இடங்களில் இன்று மாலை வரை உறைபனி மழை பெய்யக்கூடும் என்பதால், தெற்கு Ontario வின் சில பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Toronto விற்கு வடக்கே உள்ள சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் சேர்ந்து, சுமார் 5 முதல் 12 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவும் பொழியக்கூடும் என்று Environment Canada தெரிவித்துள்ளது.
இதைவிட வடக்கு நோக்கியுள்ள Sault Ste. Marie, Thunder Bay மற்றும் Dryden வரையிலான பகுதிகளில் உறைபனி மழையும், சுமார் 20 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவும் இருக்கக்கூடும்.
மேற்குப் பகுதி நிலவரப்படி Alberta, British Columbia மற்றும் Yukon வடக்குப் பகுதிகளில் கடும் குளிர் நிலவும் என்று Environment Canada எச்சரித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளை நோக்கும்போது, Newfoundland மற்றும் Labrador மாகாணத்தின் பெரும் பகுதிகளில் குளிர்கால புயல் எச்சரிக்கை நீடிக்கிறது. Labrador இன் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் பனிப்புயல் போன்ற சூழல் நிலவக்கூடும் என்றும், அங்கு 60 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Newfoundland Power நிறுவனத்தின் இணையதளத் தரவுகளின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரப்படி சுமார் 5,300 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி தவித்து வருதாக கூறப்படுகிறது.

