அநாகரீகமான நடத்தை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 26 வயது தாய்லாந்து நாட்டவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரபலமான சுற்றுலாப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் நுழைவாயிலுக்கு அருகில் மேலாடையின்றி நடந்து செல்வதைக் காட்டும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டார்.
இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அநாகரீகமான நடத்தைக்காக இரண்டு வார சிறைத்தண்டனையும், பொது மக்களுக்கு இடையூறு விளைவித்ததற்காக ஒரு மாத சிறைத்தண்டனையும் நீதிமன்றம் விதித்தது, இரண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
அவரது துணைவருடனான தனிப்பட்ட தகராறு இந்த சம்பவத்திற்கு வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.