14.7 C
Scarborough

மேற்குலகை நம்பிய பிரபாகரன்: வியூகத்தை முறியடித்த மஹிந்த!

Must read

மேற்குலகம் தன்னைக் காப்பாற்றுமென பிரபாகரன் இறுதிவரை நம்பி இருந்தார் எனவும், அதற்கு மஹிந்த ராஜபக்ச இடமளிக்காததாலேயே அவரை மேற்குலகம் குறிவைக்க ஆரம்பித்தது எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
“போரை நிறுத்துமாறு இறுதிக்கட்டம்வரை மேற்குலக நாடுகள் மஹிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்தன. அதற்கு அவர் அடிபணியவில்லை. போரை தொடர்ந்து முன்னெடுத்தார்.

காப்பற்றப்படுவீர்கள் என்ற உத்தரவாதத்தை பிரபாகரனுக்கு மேற்குலகம் வழங்கி இருந்ததால் கடைசி இரு மணிநேரம்கூட அந்த நம்பிக்கை பிரபாகரனுக்கு இருந்தது. புலிகளின் உரையாடல்களை நாம் கண்காணித்திருந்தோம். அதன்மூலம் இவ்விடயம் தெரியவந்தது.” – எனவும் அவர் கூறினார்.

பிரபாகரனை காப்பாற்ற முடியாமல்போனது மேற்குலகுக்கு பலத்த அடியாகும். எனவே, அன்றில் இருந்துதான் மஹிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டு, ஆட்சி மாற்ற முயற்சி எடுக்கப்பட்டது.” – என சரத் வீரசேகர மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article