துப்பாக்கி மீட்கப்பட்ட விவகாரமொன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட பிஸ்டல் ஒன்று மாக்கந்துர மதுஷிடம் சென்றமை குறித்தான விசாரணைக்கு, இன்று காலை சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அந்த விசாரணைகளின் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

