13.8 C
Scarborough

முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இலங்கை ஏ அணி

Must read

இலங்கை ஏ கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அயர்லாந்து ஏ மற்றும் ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுடன் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.

மேலும் ஏப்ரல் மாத இறுதியில் இலங்கை ஏ அணி ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக நான்கு நாள் டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் குறித்த முத்தரப்பு தொடர் ஏப்ரல் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையிலான நான்கு நாள் போட்டி ஏப்ரல் 29ஆம் திகதி முதல் மே 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. முத்தரப்பு மற்றும் நான்கு நாள் போட்டிகள் அனைத்தும் அபுதாபியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முத்தரப்பு தொடருக்கான போட்டி அட்டவணை

ஏப்ரல் 13 – இலங்கை ஏ எதிர் அயர்லாந்து ஏ – அபுதாபி
ஏப்ரல் 15 – இலங்கை ஏ எதிர் ஆப்கானிஸ்தான் ஏ – அபுதாபி
ஏப்ரல் 19 – இலங்கை ஏ எதிர் அயர்லாந்து ஏ – அபுதாபி
ஏப்ரல் 23 – இலங்கை ஏ எதிர் ஆப்கானிஸ்தான் ஏ – அபுதாபி
ஏப்ரல் 25 – இறுதிப்போட்டி – அபுதாபி

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article