இந்தியாவின் மூன்று குரூப்-ஸ்டேஜ் சம்பியன்ஸ் டிராபி போட்டிகள் மற்றும் டுபாயில் நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று (03) மாலை முதல் தொடங்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
சம்பியன்ஸ் டிராபி பெப்ரவரி 19 முதல் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெற உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் உலகின் முன்னணி எட்டு அணிகள் பங்கேற்கும். இந்திய அணிக்கான போட்டிகள் டுபாயில் நடக்கிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 5.30 மணி முதல் தொடங்குகின்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகளை நேரில் பார்க்க ஆர்வமாக உள்ள ரசிகர்கள், அதிகாரப்பூர்வ தளங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் பங்குதாரர்கள் மூலம் ஒன்லைனில் டிக்கெட் வாங்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள், டுபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகு வெளியிடப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.