மார்க்கம் 7ஆம் வட்டாரத்திற்கான இடைத் தேர்தலில் நிமாசா பட்டேல் வெற்றிபெற்றுள்ளார்.
இந்தத் தொகுதியில் கிள்ளி வளவன் இரண்டாம் இடத்திலும், ஆரணி முருகானந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி, 2954 வாக்குகளைப் பெற்று நிமிசா பட்டேல் வெற்றிபெற்று கவுன்சிலராக தெரிவாகியுள்ளார்.
இரண்டாவமு இடத்தில் கிள்ளி செல்லையா 2098 வாக்குகளையும், மூன்றாம் இடத்தில் ஆரணி முருகானந்தன் 2055 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஈழத்தமிழர்களின் வாக்குகள் பிரிந்து சென்றதால் நிமிசா பட்டேல் வெற்றிபெற்றுள்ளதாக ஈழத் தமிழ் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

