மஹா கும்பமேளாவில் புனித நீராடிவிட்டு பக்தர்கள் சென்ற வேனில் லொறி மோதியதில் இன்று 7 பேர் பலியாகியுள்ளனர்.
இந்திய உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்று வருகிறது. பெளஷ பெளர்ணமியையொட்டி ஜனவரி 13ஆம் திகதி தொடங்கிய இந்நிகழ்வு, பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், கும்பமேளாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர பக்தர்கள் சென்ற வேன் மீது லொறி மோதிய விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.