5.7 C
Scarborough

மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை

Must read

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம், மோசடி ஆகியவை அதிகரித்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக பூதாகரமாக வெடித்துள்ள இந்த சீர்கேட்டை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளன.

மலேசியாவிலும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் சிறுவர்கள் மீதான ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வந்தன. சிறுவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதனால் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடைவிதிக்க அந்த நாட்டின் அரசாங்கம் முடிவு செய்து நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. இந்த மசோதாவுக்கு ஆதரவு அதிகரித்து வெற்றிகரமாக சட்டமாக மாற்றப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மலேசியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட உள்ளது.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article