1.2 C
Scarborough

மலேசிய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் சிந்து!

Must read

மலேசிய ஓபன் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறு​திச் சுற்​றுக்கு இந்​திய வீராங்​கனை பி.​வி. சிந்து முன்​னேறி​யுள்​ளார். மலேசி​யா​வின் கோலாலம்​பூர் நகரில் இப்​போட்டி நடைபெற்று வரு​கிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்​றையர் கால் இறு​தி​யில் பி.​வி. சிந்​து​வும், ஜப்​பான் வீராங்​க​னை​யும் 3-ம் நிலை வீராங்கனையுமான அகானே யமாகுச்​சி​யும் மோதினர்.

இந்​தப் போட்​டி​யின்​போது சிந்து முதல் செட்​டில் 21-11 என்ற கணக்​கில் வெற்றி பெற்​றார். 2-வது செட் தொடங்க இருந்​த​போது ஜப்​பான் வீராங்​கனை அகானே யமாகுச்சி போட்டியி​லிருந்து வில​கி​னார். இதையடுத்து அரை இறுதிக்கு சிந்து முன்​னேறி​னார்.

தற்​போது உலகத் தரவரிசை​யில் 18-வது இடத்​தில் உள்ள பி.வி.சிந்​து, ஒலிம்​பிக் போட்​டிகளில் இந்​தி​யா​வுக்​காக 2 முறை பதக்​கம் வென்​றவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. ஆடவர் இரட்​டையர் கால் இறு​தி​யில் இந்​தி​யா​வின் சாத்விக்​சாய், சிராக் ஷெட்டி ஜோடி 10-21, 21-23 என்ற செட் கணக்​கில் இந்​தோ​னேசி​யா​வின் பஜார் அல்​பி​யான், முகமது பிக்​ரி ஜோடியிடம்​ தோல்​வி கண்​டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article