2.8 C
Scarborough

மட்டக்களப்பின் முதல் பேராலயத்தில் கிறிஸ்மஸ் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்!

Must read

மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய யேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தனின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

இதன்போது யேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.

இதன்போது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சிபெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள், ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது. இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது. யேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாகவுள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article