தனது சொந்த மகளை கொலைச் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த பெண்னொருவருக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.
நோவா ஸ்கோஷியாவைச் சேர்ந்த பென்னி புட்ரோ (Penny Boudreau) என்பவருக்கே நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது, இவர் தனது 12 வயது மகளான கரிசா புட்ரோ (Karissa Boudreau)-வை 2008-ஆம் ஆண்டு கொலைச் செய்தமைக்கா 2009-ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைதண்டனைக்கு உள்ளானார்.
தற்போது, அவருக்கு 60 நாட்கள் சிறையிலிருந்து பாதுகாப்பின்றி வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவருடைய பிணைக் கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்த தீர்ப்பு, ட்ரூரோ (Truro, N.S.) நகரில் நடைபெற்ற பிணைச் சபையின் அமர்வின் கடந்த ஏழு ஆண்டுகளாக பாதுகாப்புடன் வெளியே செல்ல மேற்படி பெண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததையும், அவர் சிறைக்குள் மனநல மருத்துவம் பெற்றதையும், பாஸ்டர் தாதியாக பணியாற்றியதையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 6 மாதங்களில் மீண்டும் அவரது நிலை பரிசீலிக்கப்படும் என்றும், மனநலப் பராமரிப்பு தொடரப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.