அமெரிக்க -ரஷ்ய தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஊடாக உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எந்தவித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் – ரஷ்ய தலைவர் புடின் ஆகியோர் இடையே சந்திப்பு நடைபெற்ற நிலையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புட்டின், உக்ரைனின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கூற்றுடன் நான் உடன்படுகிறேன். பரஸ்பர ஒப்பந்தம் உக்ரைனுக்கு அமைதியைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.
இதேநேரம் ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இதுவரை நான் பேசவில்லை. விரைவில் அவருடன் பேச திட்டமிட்டிக்கிறேன்” இப்போது (போர் நிறுத்தத்தை) இதைச் செய்து முடிப்பது உண்மையில் ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும். ஐரோப்பிய நாடுகளும் இதில் தலையிட வேண்டும் என்று நான் கூறுவேன், ஆனால், இது முழுக்க ஜெலென்ஸ்கியின் பொறுப்பாகும்” என்று கூறியுள்ளார்.