யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வழித்தடத்தில் தனியார் பேருந்தொன்றின் சாரதியொருவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறிப் பயணித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நேற்றையதினம் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமை தொடர்பிலான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்ட சாரதிக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் க.மகேஸ்வரனை மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
அதற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.