கனடாவின் டொரொண்டோவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குறித்த பொலிஸ் அதிகாரி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரை தாக்குதல், துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பயமுறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மே 2014 முதல் நவம்பர் 2025 வரையில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்டவர் யார், அதிகாரியுடன் என்ன உறவு என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
கான்ஸ்டபிள் போஜன் ஆன்டல் என்பவர் மீது இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் தாக்குதல், பொது அதிகாரி நம்பிக்கையைக் குலைத்தல், குற்றவியல் தொல்லை மற்றும் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆன்டல் என்ற குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரி டொரொண்டோ பொலிஸின் போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றியதாகவும் 12 ஆண்டு கால சேவை அனுபவம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

