5.4 C
Scarborough

பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம்!

Must read

நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவின் 3 வது வருட பூர்த்தியை ஒட்டி வியாழக்கிழமை (14) அன்று பொத்துவிலில் அமைதி வழிப் போராட்டம் இடம் பெற்றது.

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் இணைப்பாளர் கலைவாணி தயாபரன் தலைமையில் பொத்துவில் கனகர் கிராமப் பகுதியில் இடம்பெற்ற இப் 14 வது நாள்,   பலர் பதாகைகள் போராட்டத்தில்   ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தை வலியுறுத்தக் கோரி இப் போராட்டம் நடைபெற்றது. மகளிர் அமைப்பினர் மற்றும் பொத்துவில் கனகர் குடியேற்ற கிராமப் பொதுமக்களும் கலந்து கொண்டனர். அங்கு  ஊடக வெளியீடு ஒன்றும் வெளியிடப்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article