15.1 C
Scarborough

பேஸ்புக்கின் உரிமையாளருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி

Must read

சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் உரிமையாளரான  மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க் கூறியதாவது :

உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு உள்ளது.

இந்நிலையில் முகமது நபியின் ஓவியத்தை பேஸ்புக்கில் யாரோ ஒருவர் வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர், எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றனர்.

அது அவர்களின் கலாசாரத்தில் மதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறினர். இதற்காக என் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கினர். நான் பாகிஸ்தானுக்கு செல்ல போவதில்லை. அதனால் அதுபற்றி கவலைப்படவில்லை.

உலகில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்று.என்று கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article