19.6 C
Scarborough

புலிகளின் பேச்சுவார்த்தை குழு முன்னாள் ஆலோசகர் சிவா காலமானார்

Must read

இலங்கையின் 34ஆவது சட்டமா அதிபராக பதவிவகித்த சிவா பசுபதி அவுஸ்திரேலியாவில் காலமானார் .

சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியைப் பயின்ற சிவா பசுபதி, கொழும்பு பல்கலைக் கழகத்தில் தனது சட்ட பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலும் பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டில் பிரதமராக பதவி வகித்த தருணத்தில் அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஒஸ்லோ பேச்சுவார்த்தை நடைபெற்றபோது தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக சிவா பணியாற்றியிருந்தார். அவ்வமைப்பின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article