இந்தியில் பிரபல டி.வி. சீரியல் நடிகையாக திகழ்ந்த நடிகை நூபுர் அலங்கார், ஆன்மீகப் பாதைக்கு திரும்பி இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் தங்கி அமைதியான எளிய வாழ்க்கை வாழ்கிறார்.
இந்தியில் சக்திமான் உட்பட 155-க்கும் மேற்பட்ட டி.வி. சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் நூபுர் அலங்கார். இவர் தனது பணத்தை பிஎம்சி வங்கியில் சேமித்து வைத்திருந்தார். முறைகேடுகள் காரணமாக இந்த வங்கி வாரியத்தை ரிசர்வ் வங்கி கடந்த 2019-ம் ஆண்டு கலைத்தது. வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது அவருக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது.
மேலும் இவரது குடும்பத்தில் சில சோக சம்பவங்கள் நடைபெற்றன. தாய் மற்றும் சகோதரி அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இதனால் உலக வாழக்கையை அவர் வெறுத்தார். குடும்பத்தைவிட்டு ஆன்மீக பாதைக்கு திரும்ப விரும்பினார். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனுமதியுடன் ஆன்மீக வாழ்க்கைக்கு திரும்பினார். சந்தியாச வாழ்க்கையை தொடங்கி தனது பெயரை பீதாம்பர மா என மாற்றிக் கொண்டார். மும்பையை விட்டு வெளியேறி நாடு முழுவதும் பயணம் செய்தார். சுமார் 3 ஆண்டுகளாக இமயமலை குகை, காடுகள் மற்றும் தொலைதூர ஆசிரமங்களில் அவர் தங்கி தியானம் செய்தார். கடும் பனி, எலி கடி, உடல்நிலை பாதிப்பு போன்ற சிரமங்களையும் அவர் தங்கும் இடங்களில் சந்தித்தார்.
ஆசிரமத்துக்கு வருபவர்கள் அளிக்கும் உடைகளையை அவர் அணிகிறார். தன்னுடன் எப்போதும் 5 செட் உடைகளை மட்டுமே வைத்துக் கொள்கிறார். செலவுக்கு பிறரிடம் யாசகம் பெறுகிறார். அவற்றை கடவுளுக்கும், அவரது குருவுக்கு அளிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ ஆடம்பரம்மின்றி வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன். இயற்கையுடன் இணைந்து வாழ்வது மன அமைதியையும், தெளிவையும் கொடுக்கிறது. யாசகம் பெறுவது மூலம் கர்வம் ஒழிந்துள்ளது. தண்ணீர் கடலுக்கு திரும்புவதுபோல், தெய்வீகத்துடன் கலப்பதுதான் வாழ்வின் நோக்கம்’’ என்கிறார்.
HinduTmail

