Ukraine இல் போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், Ukraine இன் நட்பு நாடுகளைச் சந்திப்பதற்காக பிரதமர் Mark Carney அடுத்த வாரம் France செல்லவுள்ளார்.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் Carney, Paris இல் இருப்பார் என்றும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக ஆர்வமுள்ள நாடுகளின் கூட்டணியை அவர் சந்திப்பார் என்றும் பிரதமர் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து Carney வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், Ukraine அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடமிருந்து பாதுகாப்பு உத்தரவாதங்களைக் கோரி வரும் நிலையில், Ukraine ஐ பலப்படுத்துவதிலும், Russia வின் எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுப்பதிலுமே தனது கவனம் இருப்பதாகக் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Ukraine இன் மறுசீரமைப்புக்காக அதிக பங்களிப்பு வழங்கும் நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கிறது. அந்தவகையில், கனடாவின் மொத்தப் பங்களிப்பு இதுவரை $23.5 பில்லியன் என கனடா அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இந்தத் தொகையில் $12 பில்லியன் நேரடி நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா இதுவரை நிதி ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நிலையில் இறையாண்மை கொண்ட Ukraine ஐ ஆதரிப்பதில் கனடா தீவிரமாக உள்ளது என்பதை நிரூபிக்க, எதிர்காலத்தில் ஒரு இராணுவ ரீதியான பங்களிப்பையும் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

