கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ட்ரூடோவின் முன்னாள் மனைவி!
கனடா முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியை முத்தமிடும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கின.
அதற்குப் பின் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தும் வகையில் வெளிப்படையாக சேர்ந்து பொது இடங்களுக்குச் செல்கிறார்கள்.
ட்ரூடோ, ஊடகவியலாளரான சோபி கிரிகோயிர் என்னும் பெண்ணை திருமணம் செய்து அவருடன் 18 ஆண்டுகள் வாழ்ந்துவந்தார். தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
2023ஆம் ஆண்டு தம்பதியர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், தங்கள் விவாகரத்து குறித்து சோபி எதுவுமே கூறவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார் சோபி.
18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தபின் விவாகரத்தாகி, தன் கணவர் வேறொரு பெண்ணைக் காதலிப்பது தெரிந்தும் எப்படி அவரால் அமைதியாக இருக்கமுடிகிறது என்னும் ரீதியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த சோபி, நாம் சாதாரண மனிதர்கள், இதுபோன்ற விடயங்கள் நம்மை பாதிக்கத்தான் செய்கின்றன, அது எல்லோருக்கும் பொதுவான விடயம்தானே.
ஆனால், அதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பது என்னுடைய முடிவு. இப்படி ஒரு விடயம் என் வாழ்வில் நிகழ்ந்தபிறகு, நான் என்னவாக மாறப்போகிறேன் என்பதும் நான் எடுக்கும் முடிவுதான்.
அப்படியானால், எனக்கு உணர்ச்சிகளே கிடையாதா? நான் அழமாட்டேன், சத்தம்போட மாட்டேன், சிரிக்கமாட்டேன் என்று அர்த்தமா?
அப்படியில்லை, இளகிய மனம் எனக்கு, அப்படியிருக்கும்போது இப்படிப்பட்ட விடயங்கள் என்னை பாதிக்காதா?
விடயம் என்னவென்றால், இதுபோன்ற நேரங்களில் என்னை பாதிக்கும் உணர்வுகள் என்ன, அவற்றிற்கு நான் எப்படி ரியாக்ட் செய்வது என்பது நான் எடுக்கும் முடிவு.
என்னை ஒருவர் ஏமாற்றமடையச் செய்ய நான் அனுமதிக்கிறேன், நான் கோபமடைய என்னை அனுமதிக்கிறேன், கவலைப்படுவதை அனுமதிக்கிறேன். காரணம், நான் மன நலம் குறித்து ஆலோசனை கொடுகும் ஒரு நபர். ஆக, இப்படி உணர்வுகளுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் சோபி.
பாடகியைக் காதலிக்கும் கனடா முன்னாள் பிரதமர்: முன்னாள் மனைவி தெரிவித்துள்ள கருத்து | Sophia Gregoire About Katy Perry And Trudeau Love
உணர்வுகளை பரிசீலிக்க இடம் கொடுத்தாலும், அவை தன்னை உணர்ச்சி பொங்க வைத்துக்கொள்வதை, அல்லது அவற்றிற்கு ரியாக்ட் செய்துகொண்டே இருப்பதை தான் தவிர்ப்பதாகக் கூறும் சோபி, அப்படிச் செய்வது அதிக மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்கிறார்.
இப்படிப்பட்ட விடயங்களை இந்த வயதில் சந்திக்கும் நிலையிலும், அவை என் மகிழ்ச்சியை பாதிக்க அனுமதிப்பதா இல்லையா என்பதை முடிவு செய்வது நம் கையில்தான் உள்ளது என்கிறார் சோபி.
ஜஸ்டின் ட்ரூடோ தற்போது காதலிக்கும் கேற்றி பெர்ரியும் ஓர்லாண்டோ ப்லூம் (Orlando Bloom) என்பவருடன் ஆறு ஆண்டுகள் இணைந்துவாழ்ந்துவந்தவர்தான்.
அவர்களுக்கு டெய்ஸி டவ் (Daisy Dove) என்னும் நான்கு வயது மகள் இருக்கிறாள்.

