கனடா பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகைக்கு முன்னதாக, மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்ய கனடா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 166 பேர் பலியாகினர்.
இந்த சதி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததாக பாகிஸ்தானில் பிறந்த தஹாவூர் ராணா, 64, மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இவர், 1997ம் ஆண்டு கனடாவுக்கு குடி பெயர்ந்து, அந்நாட்டு குடியுரிமை பெற்றவர்.
குறித்த சந்தேக நபர் கடந்த ஆண்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, சிறையிடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தஹாவூர் ராணாவின் குடியுரிமையை ரத்து செய்யும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கனடா கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலத்தில் மோசமடைந்த, கனடா – இந்தியா உறவை புதுப்பிக்க தற்போதைய பிரதமர் மார்க் கார்னி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்நிலையிலேயே ராணாவின் கனடா குடியுரிமை ரத்து செய்வதற்கான நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

