18.9 C
Scarborough

பட்டிணியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உதவும் கனடாவிற்கு தடையாக அமையுமா?

Must read

Hamas தனது ஆட்சியை வலுப்படுத்த ஆதாரங்களை வழங்காமல், அதை திருடுவதாகக் கூறி Israel, Gaza வில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு தேவையான உதவியை மட்டுப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பாலான பாலஸ்தீன பிரதேச மக்கள் சிறிய நிலப்பரப்பிற்குள் சிக்கி உதவியை நம்பியுள்ளனர்.

Gaza வில் உள்ள விரக்தியடைந்துள்ள இந்த பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக Ottawa வில் உதவி வாகானங்கள் தயாராக இருப்பதாகவும், Israel அவர்களை அனுமதிக்கும் என்று நம்புவதாகவும் வெளியுறவு அமைச்சர் Anita Anand கூறுகிறார். Israel மற்றும் மேற்குக் கரையின் எல்லையாக இருக்கும் Jordan காசாவிற்குள் நுழைய Israel அனுமதிக்கும் வரை கனடாவின் உதவிகளை முன்னிலைப்படுத்த அனுமதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கனேடிய உதவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை Gaza விற்குள் நுழைவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக வெளியுறவு அமைச்சர் வெள்ளிக்கிழமை தனது Israel பிரதிநிதியான Gideon Sa’ar உடன் பேசியதாகவும் அதற்கு Israel சில மனிதாபிமான வழித்தடங்களை நிறுவ அனுமதி வழங்கியுள்ளதாகவும் Anand கூறினார். இதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபை குழுக்களும் உதவிகளை வழங்க முடியும் என்பதுடன் மேலும் சில நாடுகளும் விமானம் மூலம் உணவுப் பொருட்களை போடமுடியும்.

Gaza வில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் பல நாட்களாக சாப்பிடாமல் இருப்பதாகவும், கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பஞ்சம் போன்ற நிலைமைகளைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ள ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம், அண்ணளவாக மூன்று மாதங்களுக்கு Gaza முழுவதற்கும் உணவளிக்க போதுமான உணவு தங்களிடம் இருப்பதாகவும் கூறியுள்ளது. உணவுப்பற்றாக்குறை காரணமாக கடந்த மாதத்தில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட 24 குழந்தைகள் உட்பட பல பட்டிணிச்சாவுகள் பதிவாகியுள்ளன.

இந்த வாரம்  பாலஸ்தீனம் குறித்து France மற்றும் Saudi Arabia ஆகிய நாடுகளால் ஒண்றிணைக்கப்படும் ஐ.நா.வின் ஓர் உயர்மட்ட மாநாடு New York இல் நடைபெறவுள்ளது. இது இரு அரசு தீர்வைப் பாதுகாப்பதற்கான வழியை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் Anand உம் கலந்து கொள்ளவுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article