3 C
Scarborough

‘படையப்பா’ ரீ ரிலீஸை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த சௌந்தர்யா ரஜினிகாந்த்

Must read

ரஜினியின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் இடையில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையில் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசித்துள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த். இந்த அனுபவம் குறித்து அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினியின் மெகா ஹிட் படமான ‘படையப்பா’ ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. புதிய படங்களுக்கு இணையாக வசூலில் வரவேற்பினை பெற்று வருவதால் தியேட்டர் உரிமையாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர். அதோடு ரஜினி ரசிகர்களும் திரையரங்குகளில் படையப்பாவின் தரிசனத்தை கண்டு ரசித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘படையப்பா’ மறு வெளியீடு குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தன்னுடைய 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பாராட்டுக்கள் தெரிவித்தனர். அதோடு ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய ‘படையப்பா’ ரீரிலீஸ் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் தியேட்டரில் கண்டு ரசித்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “படையப்பா படத்தை மீண்டும் 25 வருடங்களுக்கு பின்பாக அனைவரும் கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களுடன் சேர்ந்து நானும் படத்தை பாத்தேன். அப்பா 25 வருடங்களுக்கு முன்பாக எழுதிய கதை, இப்போது பார்க்கும் போதும் புதிய படம் மாதிரி இருக்கிறது.

கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தியேட்டருக்கு வந்து படத்தை பார்த்திருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் அப்பாவுடன் திருப்பதிக்கு சென்ற காரணத்தால், அந்த நாள் படத்தை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே பாடல்களை எல்லாம் ஒன்ஸ் மோர் செய்து பார்த்திருந்தாலும், இப்போது தான் ஊஞ்சல் காட்சிகள் போன்ற சீன்களை ஒன்ஸ் மோர் செய்து பார்க்கிறேன்.

அப்பா ஒரு எமோஷன். தியேட்டருக்கு வந்து அனைவரும் படத்தை பாருங்கள். அப்பா ‘படையப்பா’ ரீ ரிலீசுக்காக கொடுத்த பேட்டியை நான் தான் இயக்கினேன். எனக்கு அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். எங்கள் குடும்பத்துடைய சார்பாக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

அவருடைய இந்த பேச்சு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருந்தனர். கமர்ஷியல் ஜானரில், ரஜினியின் தரமான மாஸ் சீன்களுடன் வெளியான ‘படையப்பா’ இன்றளவும் ரசிகர்களின் பேவரைட்டாக உள்ளது.

இந்நிலையில் 25 ஆண்டுகள் கழித்து மறு வெளியீட்டிலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். பிரபலங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்து வரும் நிலையில், ரசிகர்கள் இடையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்துக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article